search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளா மழைவெள்ளம்"

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதியுதவியை கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து வழங்கினார். #KeralaFloods #KeralaFloodRelief #RaghavaLawrence
    தொடர் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கேரள முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் வழங்கினார்.



    நடிகர் விஜய் ரூ.70 லட்சமும், நடிகர் விக்ரம் ரூ.35 லட்சமும், விஜய் சேதுபதி ரூ.30 லட்சமும் நிதியுதவி வழங்கியுள்ளனர். 

    நடிகர்கள் கமல், ரஜினி, சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட பலரும் நிதியுதவி வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #RaghavaLawrence

    கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிவாரணத் தொகை வழங்கியுள்ளது. #KeralaFloodRelief #KeralaRains
    கேரளாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ள நிவாரண முகாம்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மத்திய அரசு ரூ.600 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில், உலக நாடுகளில் இருந்தும் நிதியுதவி வருகிறது. இங்கும் பலர் உதவி வருகின்றனர். திரைத்துறையில் இருந்து பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.

    விஜய், விஜய் சேதுபதி, விக்ரம், கமல்ஹாசன், ரோகிணி, விக்ரம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சூர்யா, கார்த்தி, ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்மூட்டி எனப் பலரும் உதவி உள்ளனர். இந்நிலையில், லைகா புரொடக்‌‌ஷன்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி ரூபாய் நிதியுதவியை கேரள முதல் மந்திரி பினராய் விஜயனிடம் வழங்கியுள்ளது. #KeralaFloodRelief #KeralaRains 

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவ, தனது ரசிகர்கள் மூலம் நடிகர் விஜய் ரூ.45 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளார். #KeralaFloods #KeralaRains #Vijay
    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் தனது ரசிகர்மன்ற பொறுப்பாளர்கள் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கினார்.

    இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த தனது ரசிகர்மன்ற 15 மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் தலா ரூ.3 லட்சம் அனுப்பினார். இந்தப் பணத்தைக் கொண்டு முகாமில் தஞ்சமடைந்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தேவையான நிவாரண பொருட்களை வாங்கித் தருமாறு கூறியுள்ளார்.

    இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக கேரளாவில் பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

    நிவாரண பொருட்கள் அடங்கிய லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தானம் திட்டா, பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டது.



    அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு, ரவை, மைதா, ஆடைகள், போர் வைகள், பெட் சீட், பால் பவுடர், நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரசிகர் மன்ற நிர்வாகிகளால் நேரடியாக வழங்கப்படுகிறது.

    கேரளாவில் உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கும், விஜய் நிதி அனுப்பியுள்ளார். ரசிகர் மன்ற நிர்வாகிகள் கேரள வெள்ள நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு அங்கு தேவையான பொருட்களை வாங்கித் தருவதோடு, உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    வரி விலக்கு பெறுவதற்காக பிரபலங்கள் வெள்ள நிவாரண நிதியை அரசிடம் முறைப்படி வழங்கி வருகிறார்கள்.

    ஆனால் அதை விரும்பாத விஜய் நேரடியாக ரசிகர்களுக்கு அனுப்பி அவர்கள் மூலம் உதவுவது குறிப்பிடத்தக்கது. #KeralaFloods #KeralaRains #Vijay
    கேரள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவிகேட்டு வீடியோ வெளியிட்ட எங்க வீட்டு மாப்பிள்ளை பிரபலம் சீதாலட்சுமி பாதுகாப்பு கடையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #KeralaFloods #KeralaFloodRelief
    எங்க வீட்டு மாப்பிள்ளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீதாலட்சுமியின் வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் உணவு உள்ளிட்ட எந்த உதவியுமின்றி தவித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    கடந்த நூறாண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் சுமார் 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை சீதாலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மீட்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டார்.

    உதவி கேட்டு சீதாலட்சுமி வெளியிட்ட வீடியோ:


    அந்த வீடியோவில் சீதாலட்சுமி கூறியிருந்ததாவது, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் தவிக்கிறோம். மின்சாரமும் இல்லை. பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோம், இங்கு குழந்தைகளும், வயதானவர்களும் உள்ளதால் எங்களை காப்பாற்ற எதாவது செய்யுங்கள் என கோரியிருந்தார். இதையடுத்து, சீதாலட்சுமி மற்றும் அவருடன் இருந்தவர்கள் தற்போது பாதுகாப்பு படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அவரே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

    மீட்கப்பட்ட பின்னர் சீதாலட்சுமி வெளியிட்ட வீடியோ:


    கேரள மழை வெள்ளத்துக்கு கேரள நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் பிரிதிவிராஜின் வீட்டுக்குள் வெள்ளம் சென்றதையடுத்து, மீட்புப் படையினர் அவரின் வீட்டுக்குள் சென்று அவரின் தாயைப் பாதுகாப்பாக மீட்டனர். நடிகர் ஜெயராமும் அவரின் குடும்பத்தினரும் காரில் நேற்றுமுன்தினம் சென்ற போது, நிலச்சரிவில் சிக்கினார்கள். பின்னர் இந்தத் தகவல் அறிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை மீட்டனர். அதேபோல் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட நடிகை அனன்யாவும் பாதுகாப்பாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. #KeralaFloods #KeralaFloodRelief #SaveKerala #Seethalakshmi

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உணவு, உடைகளை விட தொழில்நுட்ப உதவியே அதிகம் தேவைப்படுவதாக அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief
    திருவனந்தபுரம்:

    கடந்த நூறாண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் சுமார் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. நிதியுதவிகளும், உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

    கேரளாவில் ஏற்பட்ட பெரும்பாதிப்பை அதிதீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. இந்த நிலையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத் துறை இணை மந்திரி ஏ.ஜே.அல்போன்ஸ் தற்போதைய நிலையில், கேரளாவுக்கு உணவோ, உடையோ போதுமான அளவில் உள்ளது என்றும், தற்போது கேரளாவில் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் தான் தேவை என்றும் கூறியுள்ளார்.



    இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

    மழை வெள்ளத்தால், கேரளாவில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசிப்பிடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அவற்றை சரிசெய்ய தங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள், பிளம்பர்கள் மற்றும் தச்சர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். எனவே உணவு, உடை உள்ளிட்ட தேவைகள் தற்போது போதுமான அளவில் உள்ளது என்றும், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொழில்நுட்ப உதவி இன்றியமையாதது என்றும் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #SaveKerala 

    வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #Rajinikanth
    கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். 

    இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை அளித்துள்ளார்.



    முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் ஷங்கர் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Rajinikanth

    தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு இயக்கநர் ஷங்கர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி அளித்துள்ளனர். #KeralaFloods #KeralaFloodRelief
    கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். 

    பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குர் ஷங்கர் தலா ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.



    முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief

    தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். #KeralaFloods #NivinPauly
    கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். 

    பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மக்களுக்கு உதவும்படி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    " "கடவுளின் தேசம்" எனப்படும் கேரளாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதிலும், கேரளா "இந்தியா" என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமைபட்டு கொண்டே இருப்பேன் என்பதில் ஐயமில்லை.

    ஆனால் இன்று, எங்களது அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்காணோர் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வீடு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். என் மாநில மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது. இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான். 



    வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள, என் தேசத்து மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் உடனடியான தேவைகள் அவசியம் என்பதால் தான் இந்த கோரிக்கை. 

    உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவய பொருட்களை உடனடியாக கேரளா மக்களுக்கு அனுப்புங்கள். யார்  மூலமாக என்பது முக்கியம் இல்லை, உடனடியாக  வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். "கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும்" என்கிற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #KeralaRain #NivinPauly

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். #KeralaRain #KeralaFlood #VijaySethupathi #Dhanush
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் விஜய் சேதுபதி தனது பங்குக்கு ரூ25 லட்சம் அறிவித்துள்ளார். அதேபோல் நடிகர் தனுஷ் ரூ.15 லட்சம் அறிவித்துள்ளார். 



    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா - கார்த்தி ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். விஷால் மற்றும் சித்தார்த் ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் வழங்கியுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நிதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #VijaySethupathi #Dhanush

    கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் நடிகர் பிரித்விராஜ் வீட்டில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பெரிய பாத்திரத்தின் மூலம் அவரது தாயார் மீட்கப்பட்டுள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj
    கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. மாநிலமே வெள்ளத்தால் சூழ்ந்து இதுவரை 97-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

    தமிழில் மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் பிரித்விராஜ் வீடு கொச்சியில் உள்ளது. கொச்சியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல வீடுகளுக்குள் நீர் புகுந்து உள்ளது. பிரித்விராஜின் வீட்டிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

    அவர் வீடு வெள்ளத்தில் மிதக்கும் புகைப்படங்கள் வெளியானது. பிரித்விராஜின் தாயாரும், நடிகையுமான மல்லிகா சுகுமாரன் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். அவரை 4 பேர் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர். அவரை பெரிய பாத்திரத்தில் அமர வைத்து வீட்டில் இருந்து வெளியே தூக்கி வந்துள்ளனர். அந்த படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.



    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மலையாளம், தமிழ் திரையுலக நடிகர்கள் நிவாரண உதவி அளித்துள்ளனர். கேரள மக்களுக்கு உதவி செய்யுமாறு மலையாள நடிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    அவசர உதவி எண்களையும் வெளியிட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு டீ, பிஸ்கட், ரொட்டி, போர்வை, நாப்கின், குழந்தைகள் அணியும் உடை இருந்தால் அளிக்குமாறு நடிகர் துல்கர் சல்மான் முகநூலில் தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #Prithviraj 

    தொடர் கனமழையால் வரலாறு காணாத பேரழிவை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு நடிகர் சித்தார்த் ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். #KeralaRain #KeralaFlood #Siddharth
    கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் கேரள மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 97 பேர் உயிரிழந்துள்ளனர். 

    கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சித்தார்த் தன் பங்குக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    நான் உனக்கு தைரியம் தருகிறேன், நான் உன்னை வேண்டிக்கொள்கிறேன்! என்று குறிப்பிட்டு (#KeralaDonationChallenge) என்ற ஹேஷ்டேக்கில் நீங்களும் கேரளாவுக்கு உதவலாம். என்று குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், நடிகை ரோஹிணி உள்ளிட்டோர் கேரளாவுக்கு நிதி உதவி அளித்துள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்கமும் நதி அளித்துள்ளது. #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Siddharth

    தொடர் கனமழையால் கேரளா வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில், நடிகை ரோஹிணி கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் அளித்துள்ளார். #KeralaRain #Rohini
    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளாவில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு பிறகு இடுக்கி அணை நிரம்பியுள்ளது. அதேபோல் முல்லை பெரியாறு அணையும் 142 அடியை தொட்டுள்ளது. 

    மொத்தமாக 33 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக பெரும்பாலான ஏரிகள், குளங்களும் நிரம்பிவிட்டன. 

    வரலாறு காணாத பேரழிவை கேரள சந்தித்துள்ளதால் இதுவரை 186 பேர் உயிர் இழந்துள்ளனர். 211 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம், கப்பற்படை மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



    இந்த மழை காரணமாக மாநிலத்தில் ரூ.8 ஆயிரம் கோடி சேதமடைந்துள்ளதாக முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஒதுக்கி உள்ள ரூ.100 கோடி போதாது என்றும் முதல் கட்டமாக ரூ.1200 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் கேரளாவுக்கு நிவாரணத் தொகையை அறிவித்துள்ளன. அதேபோல் பிரபலங்கள் பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு உதவித்தொகை அனுப்பி வருகின்றனர். நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, கமல்ஹாசன் உள்ளிட்டோர் ரூ.25 லட்சம் அறிவித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ரோஹிணி ரூ.2 லட்ச ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். #KeralaRain #KeralaFloods #Rohini

    ×